business

img

செஸ், சர்சார்ஜ் வரி வசூலில் பாஜக அரசு சாதனை...மக்கள் மீதான சுரண்டல் 2 மடங்கு அதிகரிப்பு.....

புதுதில்லி:
வேறெந்த வகையிலும் சாதனை படைக்க முடியாத மோடி அரசு, மக்களைக் கசங்கிப் பிழிந்து வரிகளை வசூலிப்பதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரேல் - டீசல் மீதானவரிகள் மூலமாக மட்டும் 19லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் இருந்து சுரண்டியுள் ளது. தொடர்ந்து சுரண்டி வருகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் கூட பெட்ரோல் - டீசல் மீது ‘அக்ரி இன்பரா செஸ்’ என்றபுதிய வரியை விதித்துள்ளது.ஜிஎஸ்டி வரி விதிப்பை தீவிரமாக அமல்படுத்தியும் கூட, மறுபுறத்தில், பல்வேறு பொருட்களின் மீது தனியாக ‘செஸ்’, ‘சர்சார்ஜ்’ என அதிகளவிலான வரியை வசூலித்து வருகிறது. 

இந்நிலையில்தான், 2020-21 நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வரி வசூல் அளவீட்டில் ‘செஸ்’ மற்றும் ‘சர்சார்ஜ்’ வாயிலான வருமானம் 19.9 சதவிகிதம் என்ற அளவிற்கு இரண்டு மடங்குஅதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி யுள்ளன. இந்த வருமானம் 2011-12 நிதியாண்டில் வெறும்10.4 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது என்றுகூறி மோடி அரசு பெருமைப் பட்டுள்ளது.இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நிதிக் கமிஷன் கட்டமைப்பில் ‘செஸ்’ மற்றும் ‘சர்சார்ஜ்’ ஆகியவற்றை மத்திய அரசுதான் வசூல் செய்கிறது. இதில் மாநில அரசுக்கான உரிமைஎதுவும் இல்லை. மாநிலங் களுக்கு அளிக்கப்படும் வரிபகிர்மான அளவீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று  15-ஆவது நிதிக் கமிஷன் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

;